சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள்
சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது. கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மனத்திற்குக் காரணமாகும்.
கற்பூரவல்லி வறண்ட சமவெளிகள், சரிவான நிலப்பகுதிகளில்,கொத்தான இலைத் தொகுப்புகளுடன் காணப்படும். பல்லாண்டுகள் உயிர் வாழ்பவை. இலைகள், மணமுள்ளவை, பசுமையானவை, தடிப்பானை சதைப்பற்றுடன் காணப்படும்.
கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.
கற்பூரவல்லி தண்டுகள் மெல்லியதாகவும், வளைந்தும், ஒடியும் தன்மையுடனும் இருக்கும். நீலநிறமான பூங்கொத்துகள் வாசனையுடன் காணப்படும்.
கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; கோழையகற்றும்.
கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும்.குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைத் தவிர்க்க, கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி கரைய பசுமையான கற்பூரவல்லி இலைகளைத் தேவையான அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, இளஞ்சூடாக வதக்கி, சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் குணமாக ஒரு தேக்கரண்டி கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.
ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச் சாறு ¼ டம்ளர் அளவுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
ஆஸ்டியோபொராஸிஸ் ஆஸ்டியோபொராஸிஸ் என்பது உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடையவும் செய்கிறது. கற்பூரவள்ளி இலைகளில் எலும்புகள் , மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும் ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த இலைகளை கொண்டு செய்யப்பட்ட தைலத்தை மூட்டுகள், எலும்பு பகுதிகளில் தேய்த்து வருவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
ஜுரம் சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக பலருக்கும் அப்பருவ காலத்தில் ஜுரம் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த ஜுரத்தை போக்குவதற்கு உடனடியாக ஆங்கில வழி மருந்துகளை நாடுவதற்கு முன்பு சில கற்பூரவள்ளி கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும், நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும், ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
ஆஸ்துமா சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுகள் நிறைந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் நிலையில் வருபவர்களுக்கு ஆஸ்துமா னாய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சிரைப்பு அதிகம் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.
இதன் இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் முதல் அரைத் தேக்கரண்டியளவு முலைப்பாலோடு சேர்த்துக் கலக்கிக் கொடுக்கலாம்...பெரியவர்களுக்கு கால் முதல் அரை அவுன்சு வீதம் சிறிது சர்க்கரையுடன் சேர்த்துக்கொடுக்கலாம்...இது சீதளத்தினாலுண்டான கபத்தைக் கண்டிக்கும்...வியர்வையை உண்டாக்கி உடம்பின் கொதிப்பைத் தணியச்செய்யும்..