google-site-verification: google71af9333e4ef08fc.html Nature: பழங்களின் ராணி - கொய்யாப்பழம்

Tuesday, July 28, 2020

பழங்களின் ராணி - கொய்யாப்பழம்

பழங்களின் ராணி -  கொய்யாப்பழம்

இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது.

கொய்யாவின் மருத்துவப் பயன்கள் 
ஒரு பிடி கொய்யா இலையை அரித்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக்காச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா) மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.
கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக்  கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு,  ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் கசாயத்தை அடித்திக் கொண்டிருக்கும் பொழுதே மற்றவர் கோழி முட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கசாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும் பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்று விடும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக்குக் காலை, பகல் மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை சங்களவு கொடுத்து வர  நாட்பட்ட சீதபேதி நின்று விடும்.
இரண்டு கைப்பிடளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும். ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.
கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும்.  பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நன்று விடும். குழ்ந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கு விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.
மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்கள்க்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் மலம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.

கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும். 

மருத்துவ குணங்கள்

கொய்யாப்பழம் கிடைக்கும் பருவத்தில் இதனை தினமும் அளவோடு உண்டால் ஆண்டுமுழுவதும் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது கொய்யாவைப் பற்றிய மறுக்க முடியாத உண்மை. 

சர்க்கரை நோய் குணமாக

இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் உட்கிரகிக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது 2-ம் வகை சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது.

உண்மையில், அனைத்துவிதமான சமச்சீர் சத்துக்களும் நம் ஊர் பழங்களில் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு ஆகிய இந்த மூன்றும்தான் இன்றைக்கு இருக்கிற மிக முக்கியமான பிரச்னைகள். இந்த மூன்றுக்குமான அருமருந்து, கொய்யாப் பழம்தான்.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், திராட்சை அனைத்தையும்விட, கொய்யாவில் அதிகம் இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தோல் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும். மலச்சிக்கலை நீக்கும். கல்லீரலைப் பலமாக்கும். புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

ஸ்கர்வி நோயிலிருந்து பாதுகாப்பு

ஸ்கர்வி நோய் என்பது விட்டமின் சி குறைபாட்டினால் பற்கள் மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் ஆகும். கொய்யா அதிக அளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. எனவே விட்டமின்-சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி நோயைத் தடுக்க கொய்யாவை அடிக்கடி உண்ண வேண்டும்.

கொய்யாவை உண்ணும் முறை

கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்து உள்ளது. உள்ளே போகப் போக சத்து குறைவாக உள்ளது. எனவே பழத்தினை நன்கு கழுவிவிட்டு துண்டுகளாக்கியோ அல்லது கடித்துச் சாப்பிடுவதோ நல்லது.

சாப்பிடும் முன் இப்பழத்தினை உண்ணலாம். உணவு அருந்திய உடனே உண்ணக் கூடாது. சிறிது நேரம் கழித்து உண்பது நல்லது.

கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம்  மிகவும் உதவி செய்கிறது.
 
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.


No comments:

Post a Comment

நெல்லிக்கனி

     நெல்லிக்காயை பொறுத்தவரை நாம் விரும்பி உன்ன கூடிய ஒன்று தான் . நெல்லியில் பெரிய நெல்லி , சிறிய நெல்லி என இரு வகை உள்ளது . ...